சிந்தனை துளிகள்
Monday, November 22, 2010
கடிதம்
நான் அனுப்புவது என் எழுத்துகளை
அல்ல என் மனதை, அதில்
நீ கண்டறிய வேண்டியது பிழைகளை
அல்ல என் காதலை ...
Friday, November 12, 2010
நன்றிகள் கோடி
நன்றிகள் கோடி
இந்த நான்கு ஆண்டுகளாய்
என்னை சுமந்ததற்கு ,
சுமைகளை மறந்து விடு
ஆனால்
சுமந்ததை மறந்து விடாதே !
உயிர்த்தோழி
என் உயிருக்குள் நீயாக
உன் உயிருக்குள் நானாக
உறவாடுகிறோம் உணர்வுகளால்
உனக்காக நான் வாழ
எனக்காக நீ வாழ
உயிர்வாழ்கிறோம் உறவாடவே !
தூக்கம்
கண்மூட மறுத்தேன்
கனவே உனை ஏற்க மறுத்தேன்
தூக்கம் பிடிக்காமல் அல்ல
தூக்கம் உன்னை கலைத்துவிடும் என்று நினைத்து !
சில நேர கவியின் சிந்தனை துளிகள்
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)