Monday, November 21, 2011

பாசம்


என் உள்ளத்தை உன்னிடம்
கொடுத்து விட்டேன்
என் உயிரையும் உனக்காக கொடுப்பேன்
நான் உன்மேல் கொண்ட அன்பிறக்காக
நீ என் மேல் கொண்ட பாசத்திற்காக !!!!!!!!!!!

Sunday, July 10, 2011

வலிகள்

ஈட்டிகள் குத்துகின்றன 
இருதயம் அழுகிறது 
அதன் வலியை நினைத்து அல்ல 
குத்திய ஈட்டிகள் 
உன் வார்த்தைகள் என்பதால் ! 
பல முறை என் உடைந்த இருதயத்திற்கு 
உருவம் அளித்தாய் என் 
அதை உருக்குலைக்கத்தானோ ? 
உருக்குலைத்த ஈட்டிகளை உன்னிடம் 
தந்துவிடுகிறேன் 
உருவம் கொடுத்த உணர்வுகளோடு 
வாழ விளைகிறேன் 
உருவம் அளித்தாய் 
உருக்குலைய வைத்தாய் 
இனி என்ன செய்வாய்??? 


Friday, May 6, 2011

பாரிஸ் ஒரு பயணம்


என் சிந்தையில் ஓடும்  அழகான அனுபவங்களை
எழுத்து வடிவம் கொடுக்க விழைகிறேன் !

மூன்று நாட்கள் முடிந்துவிட்ட 
பிறகும் 
மூன்று வேலையிலும் அதன் தாக்கம் 
அப்படி என்ன செய்தோம் 
வியந்து பார்க்கிறேன் ?
என்ன செய்யவில்லை வியந்து பார்க்க !!!!
எத்தனை ஆச்சிரியங்கள்  ( ஆவின் )
எத்தனை அதிர்ச்சிகள் ( மொக்கை , ஓடிபோலாமா )
எத்தனை கலாட்டா
( அர்த்தராத்திரியில் அந்தாக்க்ஷரி, அக்கி பூடோ , ஹூடி பாபா )
எத்தனை கேளி
( சமோசா , ஐந்து பெண்ணிடம் , அர்ச்சனா யாருக்கு ? , கோப்பை , அரே , வாகிப் , அடுத்த வீட்டு பெண்
தூங்க இரவுகள் 
சுவையான உணவுகள்
( பாவு பாஜி, பாணி  புரி , பாஸ்தா, சரவணா பவன் )
அதற்கும் மேல் 
பாரிஸ் பயணம் !!!!!!
இதற்கும் மேல் என்ன வேண்டும்
சொல் !!!!!!
காத்திருக்கிறேன் மீண்டும் 
நல்ல தோழமைகாக
நல்ல பயணத்திற்காக !!!!!

                           என்றும் இனிமையான நினைவுகளுடன் 
             உங்கள் வினோத் 

Monday, March 14, 2011

காதலி

எத்தனை முறை வேண்டுமானாலும் 
காதலிக்க தயார் 
அதில் 
தோற்கவும் தயார் 
நீ, என் காதலியாய் இருக்கும் பட்ச்சத்தில் !!!!

Sunday, February 13, 2011

Valentine'S Day


நான் நன்றாய் படிப்பேன் 
உன்னை பார்பதற்கு முன் 
நீயும் நன்றாக படிப்பாய் 
என்னை   பார்பதற்கு முன்
இருவரும் failயாய் போனோம் 
காதலித்த பின்                             
நீ மட்டும் attemptயில் பாஸ் ஆனாய் 
என்னை மறந்த பின் 
ஆனால்,
நான் attempt டிலும் failயாய் போனேன் 
உன் தங்கையை நினைத்த பின் !!!!!

Friday, January 14, 2011

French Class

உனக்கு பிடித்த அனைத்தும்
 எனக்கு தெரியும் 
என்னை உனக்கு பிடிக்கும் 
என்பதை தவிர !!!!

Tuesday, January 4, 2011

வீழ்ச்சி

வீழ்ச்சி
 அது உனது வாழ்வின் முடிவு 
ஆனால் 
அது எனது வாழ்வின் தொடக்கம் !
வீழ்ந்தேன் , மீண்டும் எழுந்தேன் 
வீழ்வதற்கு அல்ல 
மாறாக வாழ்வதற்கு 
இந்த
உலகை வெல்வதற்கு !!!