Sunday, December 5, 2010

உறக்கம்

இமைகளை முடினேன் 
வரைந்தேன்  உன் முகத்தை 
என்னோடு பேசினாய்
என்னோடு உறவாடினாய்
மறைந்தாய் எங்கோ 
தேடுகிறேன் 
உன்னை அல்ல 
நான் வடித்த கனவை 
மீண்டும் உன்னோடு வாழ 
உனக்காய் ஒரு பயணம் 
    --- உறக்கம் 

என்ன கொடுமை என் காதலை 
நிஜத்தில் மறுக்கிறாய் 
ஆனால் 
கனவில் ஏற்றுக்கொள்கிறாய்
அதனால் தான் முடிவுசெய்தேன் 
கனவில் மட்டும் 
என் காதலை வெளிப்படுத்த
உனக்காய் ஒரு பயணம் 
    --- உறக்கம் 

என்னவளே 
கனவில் நமக்கு இரண்டு குழந்தைகள் 
நிஜத்திலும் உனக்கு இரண்டு குழந்தைகள் 
ஒரு சிறிய வித்தியாசம் 
உன் கணவன் நான் அல்ல 
காதலை மட்டும் அல்ல 
வாழ்கையையும் கனவில் மட்டும் தான் தந்தாய் 
உனக்காய் ஒரு பயணம் 
    --- உறக்கம் !!




No comments:

Post a Comment